வியாழன், 9 பிப்ரவரி, 2012

கொள்ளை அழகு .......

நீ காபி
குடிக்கையில் அழகு
என்றால் ...
நீ காபி குடிக்கும்
பொழுது ..
உன் மேல் உதடை
முத்தமிட்டு கொண்டிருக்கும்
கடைசி துளி காபியை ..
உன் நாக்கினால் முத்தமிட்டு
சுவைப்பது
கொள்ளை அழகு .......

புதன், 8 பிப்ரவரி, 2012

எதார்த்தமாக தான் நடந்தது..

திருச்சி இரயில் நிலையத்தில்
பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு
பல்லவன் தரைத் தட்டி
நின்ற நடை மேடையில்
நடந்து வந்து ..
s7 பெட்டியில், பெயர்ப் பட்டியலில்
உன் பெயரை
வாசித்தது வரை ...
எல்லாமே எதார்த்தமாக தான்
நடந்தது..
பின் எதற்காக? அந்த பக்கம்
திரும்பிக்கொண்டு சிரிக்கிறாய்(?)......

Add caption